முத­லீ­டு­க­ளின் போது நில உரிமையை விட்டுக்கொடோம்: – மைத்­தி­ரி­பால சிறி­சேன உறுதி

வெளி­நாட்டு முத­லீ­டு­க­ளின் போது நாட்­டின் இறை­மைக்கு பாதிப்­பேற்­ப­டா­த­வாறு செயற்­ப­டு­வது தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­க­ளின் கொள்கை. முத­லீ­டு­கள் தொடர்­பில் வெளி­நாடு அல்­லது நிறு­வ­னத்­து­டன் உடன்­பாட்­டுக்கு வரும் போது அது தொடர்­பான தேவைப்­பா­டு­களை நிறை­வேற்­று­வ­தனைத் தவிர நில உரிமை ஒரு­போ­தும் அவர்­க­ளுக்கு உரித்­தாக்­கப்­பட மாட்­டா­தெ­னும் கூற்று உடன்­ப­டிக்­கை­யில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தார்.

அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை இலங்கை அரசு, சீனா­வுக்கு தாரை­வார்த்து விட்­டது என்ற குற்­றச்­சாட்­டுக்­கள் மேலெ­ழுந்து வரும் நிலை­யி­லேயே அரச தலை­வ­ரின் இந்­தக் கூற்று வெளி­யா­கி­யுள்­ளது. கொழும்பு பண்­டா­ர­நா­யக்கா ஞாப­கார்த்த பன்­னாட்டு மாநாட்டு மண்­ட­பத்­தில் நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற சீன – இலங்கை நட்­பு­ற­வின் 60 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்­வில் அரச தலை­வர் மைத்­திரி பால சிறிசேன உரை­யாற்­றி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது…

நாட்­டின் அபி­வி­ருத்­தி­யின் போது உல­கில் பொரு­ளா­தார ரீதி­யில் பல­மான நாடு­க­ளின் ஒத்­து­ழைப்பு தேவை. நட்­பு­ற­வான வெளி­யு­றவு கொள்கை மூலம் தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­க­ளி­னால் அனை­வ­ரி­ன­தும் ஒத்­து­ழைப்பை இன்று இலங்­கைக்கு உரித்­தாக்க முடிந்­துள்­ளது. பன்­னாட்­டுச் சமூ­கத்­தில் இலங்­கைக்கு தாக்­கம் செலுத்­தும் பல பாத­க­மான நில­மை­க­ளி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்கு கடந்த இரண்­டரை ஆண்­டு­க­ளில் தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­க­ளி­னால் முடிந்­துள்­ளது. வெளி­நாட்­டுச் சொத்­துக்­களை அதி­க­ரிப்­ப­தற்­கும், வெளி­நாட்டுக் கடன்­சு­மை­யி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்­கும் அரசு மேற்­கொண்ட செயற்­பா­டு­க­ளின் சாத­க­மான பெறு­பே­று­கள் தற்­போது தெரி­யத் தொடங்­கி­யுள்­ளன.

கடந்த இரண்­டரை ஆண்­டு­ கா­லப்பகுதியில் உற­வு­களைப் பலப்­ப­டுத்­தி­ய­த­னா­லேயே இன்று சீன – இலங்கை தூத­ரக தொடர்­பு­க­ளின் அறு­பது ஆண்டு நிறைவை மிக­வும் மகிழ்ச்­சி­யு­டன் கொண்­டாட முடி­கின்­றது. அந்த உற­வு­களைப் பலப்­ப­டுத்­து­வ­தற்குத் தற்­போ­தைய அரசு அர்ப்­ப­ணிப்­பு­டன் செயற்­­ ­ படுகின்­றது என்­றார்.

Tags: , ,