எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு சுற்றறிக்கை வெளியீடு

அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்கள் எரிபொருள் மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதில்  சிக்கனமாக செயல்படுமாறு அறிவுறுத்தும் புதிய சுற்றறிக்கை இன்று  வெளியிடப்படவுள்ளது

அரச நிறுவனங்களில் மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது தொடர்பில் பொது நிர்வாக  அமைச்சின் செயலாளரினால்  குறித்த சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறையினால் நாட்டின்  பல மின் உற்பத்தி நிலையங்கள்  செயலிழந்து   போயுள்ளமை   காரணமாக அனல் மின் நிலையங்களுக்கு மின் உற்பத்திக்கான எரிபொருளை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் பற்றாக்குறை காரணமாக கொழும்பு மற்றும்   புறநகர் பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நேற்று   மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், டீசல், பெற்றோல் மற்றும் விமான எரிபொருளை ஏற்றிச் செல்லும் 5 கப்பல்கள் எதிர்வரும் சில தினங்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன்  தற்சமயம்  35,ஆயிரம்  முதல் 40,ஆயிரம் மெற்றிக் டொன் எரிபொருளுடன்  நாட்டிற்கு கப்பலொன்று வருகைதருகின்ற நிலையில்  எரிபொருள் தட்டுப்பாடு எதிர்காலத்தில் நிவர்த்தி செய்யப்படும் எனவும்   குறிப்பிட்டுள்ளார்

மேலும் இலங்கை மின்சார சபைக்கு பண அடிப்படையில் எரிபொருளை வழங்க தயாராக இருப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் நாளாந்த எரிபொருள் தேவை 5,ஆயிரத்து 500 முதல் 6,ஆயிரம் மெற்றிக் டொன்வரையில்  காணப்படுகின்ற நிலையில்   கடந்த 18 ஆம் திகதி  9 ஆயிரத்து 500 மெற்றிக் டொன் எரிபொருள் தேவையேற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்

இதனிடையே இன்றைய மின்சார தேவை 2ஆயிரத்த 370 மெகாவாட் என மதிப்பிடப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

சபுகஸ்கந்த மற்றும் களனிதிஸ்ஸ, கெரவலப்பிட்டிய மேற்கு கரையோரம்உள்ளிட்ட   மின் உற்பத்தி நிலையங்கள் செயழிலந்து போயுள்ளமை காரணமாக நேற்று  563 மெகாவோட் மின்சார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!