அரசமைப்பு உருவாக்க தாமதத்துக்கு ஐ.தே.கவின் சுயநலனும் காரணம்: – சாடுகிறார் சம்பந்தன்

புதிய அர­ச­மைப்­புக்­கான முயற்சி தாம­த­ம­டை­வ­தற்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி மாத்­தி­ரம் அன்றி ஐக்­கிய தேசி­யக் கட்­சி­ யின் சுய­ந­ல­னும் கார­ணம் என்று கடு­மை­யா­கச் சாடி­யி­ருக்கிறார் எதிர்க் கட்­சித் தலை­வர் இரா. சம்­பந்­தன். இது­வரை சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சியே சுய­ந­லத்­து­டன் செயற்­பட்டு வரு­கி­றது என்று குற்­றஞ்­சாட்டி வந்த அவர், அண்­மைக் காலத்­தில் முதற்­ற­ட­வை­ யாக ஐக்­கிய தேசி­யக் கட்சி மீதும் நேற்­றுக் குற்­றஞ்­சாட்­டி­னார். அத்­து­டன் நாட்­டில் நியா­ய­மான தீர்வு எட்­டப்­ப­டா­விட்­டால், தமிழ் மக்­கள் மீண்­டும் புலம்­பெ­ய­ரும் நிலை ஏற்­ப­டும் என்­றும் சுட்­டிக் காட்­டி­னார்.

அமெ­ரிக்க காங்­கி­ரஸ் உறுப்­பி­னர்­க­ளுக்­கும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா. சம்­பந்­த­னுக்­கும் இடை­யி­லான சந்­திப்பு கொழும்­பில் இடம்­பெற்­றது. நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ர­னும் சந்­திப்­பில் உட­னி­ருந்­தார். இந்­தச் சந்­திப்­புத் தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பால் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள பத்­தி­ரி­கைச் செய்­தி­க் குறிப்பில் தெரி விக்கப்பட்­டி­ருப்­ப­தா­வது:

அர­சி­யல் தீர்வு

ஐக்­கிய தேசி­யக் கட்சி மற்­றும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி என்­ப­னவற்­றின் உறுப்­பி­னர்­கள் நாட்­டின் நல­னைக் கருத்­திற் கொள்­ளாது தமது அர­சி­யல் எதிர்­கா­லத்தை முன்­வைத்­துச் செயற்­ப­டு­வ­தன் நிமித்­தம் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கம் தொடர்­பில் தேவை­யற்ற ஓர் இழுத்­த­டிப்பு நில­வு­கின்­றது.

புதிய அர­ச­மைப்பு நாடா­ளு­மன்­றத்­தின் மூன்­றில் இரண்டு பெரும்­பான்­மை­யைப் பெறு­வ­தோடு மாத்­தி­ர­மல்­லா­மல், அது பொது வாக்­கெ­டுப்­பின் மூலம் மக்­க­ளால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­ட­வும்­வேண்­டும்.

இந்­தப் பொன்­னான தரு­ணத்தை நாம் தவ­ற­வி­டக்­கூ­டாது. நான் தமிழ் மக்­க­ளின் நன்­மைக்­காக மாத்­தி­ரம் இதைக் கூற­வில்லை. மாறாக இலங்கை வாழ் அனைத்து மக்­க­ளின் நன்­மைக்­கா­க­வுமே இத­னைத் தெரி­விக்­கி­றேன்.

பிரி­வு­ப­டாத, ஒன்­றி­ணைந்த ஐக்­கிய இலங்­கையை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு உரு­வா­கும் புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் பெரும்­பான்­மை­யின அர­சி­யல் தலை­வர்­கள் பொது­மக்­க­ளி­டையே பரப்­புரை மேற்­கொள்­ள­வேண்­டும். அவர்­கள் அவ்­வாறு செய்­கின்­ற­போது இந்­தக் கரு­மத்­தில் நாங்­கள் வெற்றி காண்­பது மாத்­தி­ர­மல்ல, ஒரு பகுதி மக்­க­ளி­டையே காணப்­ப­டும் தேவை­யற்ற சந்­தே­கங்­க­ளை­யும் அது நீக்­கும்.

தேசி­யப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காணப்­ப­டா­மை­யி­னால் ஏற்­கெ­னவே 50 சத­வீ­தத்­திற்­கும் அதி­க­மான தமிழ் மக்­கள் நாட்­டை­விட்டு வெளி­யே­றி­யுள்ள அதே­வேளை, நியா­ய­மான தீர்­வினை எட்­ட­மு­டி­யாத சந்­தர்ப்­பத்­தில் இன்­னும் மக்­கள் நாட்­டை­விட்டு வெளி­யே­று­வார்­கள். அந்த நிலமை நடை­பெ­றக் கூடாது.

அன்­றா­டப் பிரச்­சினை

காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் விட­யம் தொடர்­பில் இனி­மே­லும் கால­தா­ம­தத்தை ஏற்­றுக் கொள்­ள­மு­டி­யாது.காணா­மல்­போ­னோர் தொடர்­பான அலு­வ­ல­கச் சட்­டம் நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள போதி­லும் அது இன்­னும் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

இந்த அலு­வ­ல­கத்தை நிறு­வு­வ­தன் மூலம் ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டக்­கூ­டிய விசா­ர­ணைப் பொறி­மு­றை­க­ளுக்­கூ­டா­கக் காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் தொடர்­பி­லான உண்மை கண்­ட­றி­யப்­பட்டு அவர்­க­ளது உற­வி­னர்­க­ளுக்­குத் தக்க ஆதா­ரங்­க­ளு­டன் அவை வெளிக்­காட்­டப்­ப­ட­வேண்­டும்.

காணி விடு­விப்­பில் என்­னு­டைய மக்­கள் கால­வ­ரை­யின்­றித் துன்­பப்­ப­டு­வதை அனு­ம­திக்க முடி­யாது. அரசு எதிர்­கா­லத்­தில் தேவை­யற்ற, பாத­க­மான சூழ்­நி­லை­க­ளைத் தவிர்க்கு முக­மாக இந்த அடிப்­ப­டைப் பிரச்­சி­னை­கள் தொடர்­பில் விரைந்து செயற்­ப­ட­வேண்­டும் – என்­றார்.

வாக்­கு­று­தி­கள் நிறை­வேற்­றப்­ப­ட­வேண்­டும்
நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன், “பெரிய அள­வி­லான வேலை வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வது தொடர்­பில் அர­சி­டம் தெளி­வான திட்­ட­மில்லை. இளை­ஞர்­கள் மத்­தி­யில் வேலை­யின்­மை­யா­னது பல்­வேறு சமூ­கப் பிரச்­சி­னை­க­ளைத் தோற்­று­வித்­துள்­ளது” என்­றார்.

இந்த விட­யம் தொடர்­பில் அமெ­ரிக்கா தமது ஒத்­து­ழைப்பை வழங்­க­வேண்­டும் என்று இரா.சம்­பந்­தன், காங்­கி­ரஸ் பிர­தி­நி­தி­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார். ‘‘பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு இலங்கை அரசு வழங்­கி­யுள்ள வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தனை அமெ­ரிக்க அரசு உறுதி செய்ய வேண்­டும்.

மனித உரி­மை­கள் சபை­யின் தீர்­மா­ன­மா­னது முழு­வ­து­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­வ­த­னைக் கண்­கா­ணித்து உறுதி செய்­ய­வேண்­டும். இலங்கை அரசு பன்­னாட்­டுச் சமூ­கத்­திற்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தி­லி­ருந்து தப்­பிக்க முடி­யாது’’ -என்­றும் சம்­பந்­தன் கூறி­னார்.

‘‘கடந்த இரண்டு தசாப்­தங்­க­ளாக இந்த விட­யங்­கள் தொடர்­பில் நீங்­கள் காட்­டும் உறு­திப்­பாட்­டுக்­கும் விடா­மு­யற்­சிக்­கும் நாங்­கள் தலை­வ­ணங்­கு­கின்­றோம். நிச்­ச­ய­மாக உங்­க­ளு­டைய கரி­ச­னை­களை அரச உயர்­மட்­டத்­துக்கு எடுத்­துச் செல்­வோம்’’ என்று அமெ­ரிக்க காங்­கி­ரஸ் பிர­தி­நி­தி­கள் தெரி­வித்­தாக அந்­தப் பத்­தி­ரி­கைக் குறிப்­பில் கூறப்­பட்­டுள்­ளது.

Tags: , ,