அரச வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கியின் அதிரடி உத்தரவு

இலங்கை மத்திய வங்கி அரச வங்கிகளுக்கு முக்கிய உத்தரவொன்றை வழங்கியுள்ளது.
அதன்படி நிர்ணயிக்கப்பட்ட கடன் எல்லைக்கு அதிகமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு கடன் வழங்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஊடகமொன்றுக்கு தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் வழங்கப்பட்ட கடன்களில் கணிசமான வீதம் திருப்பிச் செலுத்தப்படாமை மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிதி நிலைமை என்பவற்றை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அரச வங்கிகளின் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் நட்டமடையும் ஏனைய அரச நிறுவனங்கள் தொடர்பில் குறித்த நடைமுறையை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!