இந்தியாவில் எரிபொருள் விலை உயர வாய்ப்பு!

இந்தியாவில் கடந்த 105 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாத நிலையில் 5 மாநில தேர்தலுக்கு பிறகு லிட்டருக்கு 15 ரூபாய் வரை விலை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வந்தது. லிட்டர் 100 ரூபாய்க்கும் மேல் தாண்டிவிட்டது. இந்நிலையில் 5 மாநில தேர்தல் காரணமாக கடந்த 105 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

    
கச்சா எண்ணெய் கடந்த ஆண்டு கடைசியில் ஒரு பீப்பாய் 69 டாலராக இருந்தது. ஆனால் தற்போது 24 டாலர் கூடியுள்ளது. ஆனால் இந்தியாவில் இதுவரை ஏற்கனவே இருந்த விலையில் தான் பெட்ரோல், டீசல் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இதற்கு காரணம் தற்போது நடந்து கொண்டிருக்கும் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல். இந்தத் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல் டீசல் விலைகள் 15 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது.

மேலும் ரஷ்யா – உக்ரைன் இடையே பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அவ்வாறு பிரச்னை தொடர்ந்தால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!