கோழிப்பண்ணையை கூட தற்போதைய அரசாங்கத்தினால் சரியாக நடத்த முடியாது: அனுரகுமார திஸாநாயக்க

தற்போதுள்ள அரசாங்கத்தினால் கோழிப்பண்ணையைக் கூட சரியாக நடத்த முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் நடைபெற்ற மாவட்ட மாநாட்டில் பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதலுக்குக் காரணமானவர்களைத் தண்டிக்க இந்த அரசாங்கம் தவறிவிட்டது. முன்னாள் பொலிஸ்மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோருக்கு எதிராகச் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் 855 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும் அவர்கள் இருவரும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அரசாங்கம் தோல்வியடைந்த நிலையில், மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையை அரசாங்கம் இழந்துள்ளது.

தாக்குதல் நடைபெற்று 3 ஆண்டுகள் கடந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், 6 வருடங்கள் கடந்தால் அது மறைக்கப்பட்டுவிடும் என தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!