மின்சார நெருக்கடிக்கு பொறியியலாளர்களே காரணம்!

நீண்டகாலமாக எரிபொருள் மூலம் மின் உற்பத்தி செய்ததால் பாரிய மின்சார பிரச்சினைக்கு நாடு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. இந்த நிலைக்கு மின் பொறியியலாளர்களே காரணம் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
    
நுகேகொடை மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எமக்கு தேவையான மின் உற்பத்தியை நீர் மின் உற்பத்தி அல்லது வேறு முறைமைகளை கைவிட்டு டீசல் மூலமான மின் உற்பத்தி நடவடிக்கையை நீண்டகாலமாக மேற்கொண்டு வந்ததால் இன்று பாரிய மின் பிரச்சினைக்கு நாடு முகம்கொடுக்க வேண்டி ஏற்பட்டிருக்கின்றது.

அதனால் மின்சார சிக்கனம் மற்றும் சூரிய வெப்ப மின் உற்பத்தியை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். மேலும் நாங்கள் எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடு அல்ல. அதனால் முடியுமானளவு நாங்கள் எரிபொருளை சிக்கனப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!