கொவிட் தொற்றுக்கு பின்னரான நோய் நிலை அதிகரிப்பு!

நாட்டில் தற்போது கொவிட் தொற்றுக்கு பின்னரான நோய் நிலைமை அதிகரித்து வருகின்ற நிலையில், அவை தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
    
தற்போது கொவிட் பரவலுக்கு மத்தியில் புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் அன்றாட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதனை விடுத்து கொவிட் தொற்றுக்கு முன்னர் காணப்பட்ட நிலைமைக்கு நாடு திரும்பிக் கொண்டிருக்கிறது என்று யாரேனும் எண்ணுவார்களாயின் அது தவறாகும். மேலும் ஒரு வருட காலத்திற்கு அல்லது அதனை விட அதிக காலம் புதிய பொதுமைப்படுத்தலுக்கு அனைவரும் தயாராக வேண்டும்.

அத்தோடு கொவிட் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த ஒருவருக்கு , சிறிது காலத்தின் பின்னர் வழமைக்கு மாறான ஏதேனும் நோய் அறிகுறிகள் காணப்பட்டால் அவை தொடர்பில் வைத்தியர்களுக்கு அறிவிக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். அதற்கமைய வைத்தியர்களால் உரிய சிகிச்சைகள் வழங்கப்படும்.

இது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் மதிப்பாய்வு செய்து , கொவிட் தொற்றுக்கு பின்னர் எவ்வாறான நோய் அறிகுறிகள் ஏற்படும் , அவற்றுக்கான காரணம் என்பவை தரவுகளுடன் ஆராயப்பட்டு வருகின்றன. ஆய்வின் பின்னர் அவை தொடர்பில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!