பச்லெட் அம்மையாரின் அறிக்கையை வரவேற்கிறார் சம்பந்தன்!

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்டுள்ள அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
    
‘‘போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல், புதிய அரசமைப்பு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் விபரீதம் உள்ளிட்ட தமிழர் நலன்சார் பல விடயங்களைச் சுட்டிக்காட்டி இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிட்டுள்ள அறிக்கையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்கின்றது. இது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை நாம் அறிக்கையூடாக வெளியிடவுள்ளோம்’’ – என்று அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!