பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய ஆதரவு தருவேன்!

பயங்கரவாத தடைச்சட்டம் தற்போதைய காலக்கட்டத்தில் அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது. பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற மட்டத்தில் யோசனையினை கொண்டு வந்தால் அதற்கு ஆதரவு வழங்குவேன் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரன குறிப்பிட்டார்.
    
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
யுத்தக்காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதன் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது.யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்கள் நிறைவடைந்த நிலைமையிலும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் இருப்பது முறையற்றதாகும்.

பயங்கரவாத தடைச்சட்டம் தற்போதைய காலக்கட்டத்தில் அரசியல் நோக்கங்களுக்காக செயற்படுத்தப்படுவதை அவதானிக்க முடிகிறது.

பயங்கரவாத தடைச்சட்டம் ஊடாக கைது செய்யப்பட்டு நீண்டநாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டவர்கள் பலர் கடந்த காலங்களில் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமை மீறல் குற்றங்களுக்கு சார்பாக அமையும் என்ற காரணத்தினார் சர்வதேச நாடுகள் தொடர்ந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யுமாறு வலியுறுத்துகின்றன.

உலகில் ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தி செயற்படும் நாடுகளி;ல் பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற சட்டங்கள் நடைமுறையில் இல்லை.

இளம் தலைமுறையினர் மத்தியில் தீவிரவாத கொள்கைகள் ஏதும் கிடையாது என்பதை நன்கு விளங்கிக்கொள்ள முடிகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்து செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற மட்டத்தில் கொண்டு வரும் அனைத்து யோசனைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க தயார் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!