எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு! பொலிஸ் மா அதிபர் உத்தரவு

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். 

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்ப நிலைமைகள் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமையினால் இவ்வாறு குழப்பங்கள் ஏற்படலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மக்கள் ஒன்று கூடி கலகங்களில் ஈடுபடக்கூடிய சாத்தியங்களை தடுக்கும் நோக்கில் விசேட பாதுகாப்பு முறைமையொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்றைய தினம் சுற்றுநிரூபம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

விவசாய தேவைகள், விவசாயத்திற்கு பயன்படுத்தும் உபகரணங்கள், சுற்றுலாத்துறை, நோயாளர் காவு வண்டிகள், தீயணைப்பு வாகனங்கள், நோயாளர்களை போக்குவரத்து செய்யும் ஏனைய வாகனங்கள் போன்றவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு வாகன நெரிசல் காணப்படும் இடங்களில் கலகங்கள் வெடிக்கக் கூடிய சாத்தியங்களை தடுக்க பொலிஸ் உத்தியோகத்தர்களை அந்த இடங்களில் கடமையில் அமர்த்துமாறு பொலிஸ் மா அதிபர், பொலிஸ் நிலையங்களுக்கு அறிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!