இனி இலங்கைக்கு கடன் இல்லை – சீனா முடிவு?

இலங்கைக்கு மேலும் கடன் வழங்குவதைத் தவிர்ப்பது குறித்து சீன அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

தற்போது கொழும்பில் இருக்கும் சீன அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று, அரசாங்கத்தின் சில உயர்மட்ட அதிகாரிகளுக்கு இந்தத் தீர்மானத்தை தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
    
இரண்டு காரணங்களுக்காக கொழும்பிற்கு கடன்கள் அல்லது உதவிகளை வழங்குவதிலிருந்து விலகியிருக்க பெய்ஜிங் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக கூறப்படுகிறது.

இரண்டாவது காரணம், சர்ச்சைக்குரிய சீன உரக் கப்பல் கொழும்பிற்கு வந்த பின்னர் மீளவும் திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதேவேளை, சீனா இலங்கைக்கு 16 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!