அமெரிக்காவுக்காக வேலை செய்யும் பசிலை நீக்க வேண்டும்!

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அமெரிக்காவுக்காக வேலை செய்வதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார் அவ்வாறாயின் அவரை அரசாங்கத்திலிருந்து நீக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி , தெரிவித்தார்.
    
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கு சேவையாற்றும் அமெரிக்க பிரஜை ஒருவர் ஏன் நிதியமைச்சராக பதவி வகிக்கின்றார் எனவும் அப்புஹாமி கேள்வி எழுப்பினார்.

நாட்டைக் காட்டிக்கொடுக்க விரும்பவில்லை என்றால், அமெரிக்காவுக்காக பணிபுரியும் எந்தவொரு தனிநபரையும் அரசாங்கத்திலிருந்து நீக்குமாறு தற்போதைய நிர்வாகத்தை அவர் வலியுறுத்தினார்.
அவ்வாறு செய்யத் தவறினால் நாட்டுக்குள் இருக்கும் ஒவ்வொரு தனிமனிதனும் நாட்டையும் மக்களையும் காட்டிக் கொடுப்பதாகவே அர்த்தமாகும் என்றும் அவர் கூறினார்.

நாட்டுக்கு சேதம் விளைவித்த குழுக்கள் தொடர்பில் எழுத்துமூல ஆதாரம் இருப்பதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில விடுத்துள்ள கருத்துக்கு பதிலளித்த அப்புஹாமி எம்.பி, அவ்வாறான ஆதாரங்களை பொதுமக்களுக்கு வெளிப்படுத்துமாறு கோரியுள்ளார்.

நாட்டின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதாகக் குறிப்பிட்ட அப்புஹாமி, முன்னாள் அமைச்சர் கம்மன்பில தீவிரமான கூற்றை முன்வைத்துள்ளார் எனவும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும் உள்ள ஆதாரங்களை வெளிப்படுத்துமாறு முன்னாள் அமைச்சரிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!