ராணுவ முகாமில் திடீரென 5 பேரை சுட்டுக்கொன்ற சக ஊழியர்!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரை ஒட்டிய காசா பகுதியில் எல்லை பாதுகாப்பு படை முகாம் உள்ளது. அங்கு எல்லை பாதுகாப்பு படையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருவர். இதனால் அந்த பாதுகாப்பு நிறைந்த இடமாக கருதப்படுகிறது. இந்த நிலையில், எல்லை பாதுகாப்பு படை குழுவில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    
அதாவது, எல்லைப் பாதுகாப்பு படை பிரிவில் உள்ள கான்ஸ்டபிள் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 எல்லை பாதுகாப்பு படை ஜவான்கள் உயிரிழந்தனர். ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் பலர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் குரு நானக் தேவ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பாதுகாப்பு படை வீரர்களிடமும் அங்குள்ள மக்களிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, இந்த சம்பவம் குறித்து எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம். கான்ஸ்டபிள் சட்டெப்பா எஸ் கே நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் காயமடைந்தனர். அவரும் காயமடைந்தார். காயமடைந்த 6 பேரில் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. உண்மையை கண்டறிவதற்காக முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது, இவ்வாறு தெரிவித்தனர்.
இந்த அசம்பாவிதம் குறித்து இன்னும் முழுமையான தகவல் கிடைக்கப்பெறவில்லை. கான்ஸ்டபிள் எதற்காக தாக்குதல் நடத்தினார் என தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!