சிறுவனுக்கு பொருத்தப்பட்ட தமிழரின் இதயம்: – நெகிழ்ச்சியில் ரஷ்ய சிறுவன் செய்த செயல்!

ரஷ்யாவை சேர்ந்த சிறுவன் தனக்கு அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய மருத்துவருக்கு நன்றி கூறும் விதமாக தன்னுடன் இணைந்து ரஷ்யாவில் நடைபெறும் கால்பந்து போட்டியை காண வருமாறு அழைப்பு விடுத்துள்ளான். சென்னை சேர்ந்த மருத்துவர் பாலகிருஷ்ணனுக்கு கடந்த நவம்பர் மாதம் தான் ரஷ்யாவை சேர்ந்த சிறுவன் ரோமன் அறிமுகமாகியுள்ளார். இதயத்தசையில் இருந்த நோயின் காரணமாக சிறுவன், மூச்சு விடுவதற்கு சிரமப்படுவதை அறிந்த மருத்துவர் அவனுக்கு பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்பொழுது அவனுக்கு இதயத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உங்களது மகனுக்கு இதயக்கோளாறு ஏற்பட்டுள்ளது. அதனால் நிச்சயமாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அவனது அம்மா Ekaterina-விடம் மருத்துவர் எடுத்து கூறியுள்ளார். ஆனால் படிப்பறிவில்லாத அவனது அம்மா என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துள்ளார். இதனால் ரோமன் தாய் ஒரு பக்கம் அதிர்ச்சியில் உறைந்திருந்தாலும், சிறுவனுக்கு இதயம் எங்காவது கிடைத்துவிடுமா என்ற ஆர்வத்தில் மருத்துவரும் தேட ஆரம்பித்துள்ளார்.

இதற்கிடையில் ராமனுக்கு திடீரென ஒருநாள் இதய வலி அதிகரித்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோமனுக்கு வலி ஏற்படாத வகையில் 45 நிமிடங்கள் பாலகிருஷ்ணன் மசாஜ் செய்துள்ளார். அந்த சமயத்தில் தான் தமிழ்நாடு உறுப்பு மாற்றுஆணையத்திலிருந்து ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதில் மூளைச்சாவு அடைந்த ஒரு இளைஞரின் இதயம் தானத்திற்கு தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 35 சதவிகிதம் மட்டுமே இயங்கக்கூடிய அந்த இதயத்தினை மருத்துவர்கள் பலரும் நிராகரித்துள்ளனர். ஆனால் மருத்துவர் பாலகிருஷ்ணன், அதனையும் மீறி சிறுவனுக்கு இதயத்தை பொருத்தி வெற்றி பெற்றார்.

இளைஞரின் இதயம் என்பதால் ஆரம்பத்தில் சிறுவன் சிரமப்பட்டாலும், பின்னர் மெல்ல மெல்ல உடல்நிலைகுணமடைந்து, கடந்த ஏப்ரல் 4-ம் தேதி மீண்டும் ரஷ்யாவிற்கே திரும்பினார். இந்த நிலையில் சிறுவன் ரோமன் தனக்கு இதயத்தை பொருத்திய மருத்துவர் பாலகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ரஷ்யாவில் நடைபெறும் கால்பந்து போட்டியை நேரில் தன்னுடன் இணைந்து பார்க்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!