அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செயற்படுவோமாக இருந்தால் காலம் கனிந்து நல்லதே நடக்கும்: சி.வி.விக்னேஸ்வரன்

இந்தியா – இலங்கைக்குப் பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவதற்கும், இலங்கை அரசுக்கு நிபந்தனை விதித்திருப்பதற்கும், தமிழ் பேசும் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்தியாவை 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த கோரி கடிதம் கையளித்தமையும் ஒரு காரணமாக இருக்கலாம் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

”இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு இந்திய அரசாங்கமானது கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. அத்தோடு 13வது திருத்தச் சட்டத்தினை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கோரியிருக்கின்றது.

இதற்கு தமிழ் கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு இந்தியாவிடம் கோரி இந்தியப் பிரதமருக்குக் கடிதம் அனுப்பியமையும் ஒரு காரணமாக இருக்கலாம்.

ஆனால் அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செயற்படுவோமாக இருந்தால் காலம் கனிந்து நல்லதே நடக்கும் என ஏற்கனவே கூறியிருந்தோம் அதன் ஒரு அங்கமாகக் கூட இது இருக்கலாம்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!