
New Fotress Energy நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டு அதன் பின்னரே அது அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், வலுசக்தி அமைச்சின் ஊடாக நாட்டிற்கு எரிவாயு விநியோகிப்பதற்கான அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான நிபந்தனை குறித்த ஒப்பந்தத்தில் காணப்படுவதாக முன்னாள் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த ஒப்பந்தத்தை செயற்படுத்துவதற்குதான் பாரிய தடையாகக் காணப்பட்டதாகவும், தனக்கு பதிலாக இதனை செய்யக்கூடிய ஒருவரை குறித்த பதவியில் அமர்த்துவதே தேவையாகக் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!