
தேசிய அரசொன்றை அமைத்து அதன் பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணிலை நியமிப்பதென்றும் இதர தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகளை அதில் இணைப்பதென்றும் ஆலோசிக்கப்பட்டது.
ஆனால் தேசிய அரசொன்றுக்கு செல்வது தொடர்பில் அரசுக்குள் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதேசமயம் ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் இதில் உடன்பாடில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது .
தேசிய அரசொன்றை அமைத்து பிரதமர் பதவியில் ரணிலை நியமித்தால் இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி விடயம் தொடர்பில் மக்களின் அதிருப்தியை எதிர்நோக்க நேரிடுமென ஆளுங்கட்சியின் சிரேஷ்ட பிரமுகர்கள் அரச உயர்மட்ட தலைவர்களை எச்சரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில் பிரதமர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் மஹிந்த ராஜபக்சவுக்கு அறவே இல்லையென அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!