டெல்லி குப்பையால் புதைகிறது, மும்பை நீரில் மூழ்குகிறது- சுப்ரீம் கோர்ட்டு கடும் கண்டனம்

டெல்லி அரசில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கு விசாரணையின் போது, டெல்லி குப்பை மேடுகளில் புதைந்து கொண்டு இருக்கிறது. மும்பை நீரில் மூழ்கி கொண்டு இருக்கிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

டெல்லி அரசில் யாருக்கு அதிகாரம் என்ற வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் எம்.பி. லோகூர், தீபக்குப்தா அமர்வு ஒரு கேள்வியை எழுப்பியது. அதில் தலைநகர் டெல்லியில் மலைபோல குப்பை மேடுகள் உள்ளது. அதை அகற்றும் அதிகாரம் யாருக்கு உள்ளது? டெல்லி குப்பை மேடுகளில் புதைந்து கொண்டு இருக்கிறது. மும்பை நீரில் மூழ்கி கொண்டு இருக்கிறது.

ஆனால் அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. இதில் கோர்ட்டு தலையீடும் போது எங்கள் நடவடிக்கைகளுக்காக நாங்கள் விமர்சனத்துக்கு ஆளாகி தாக்கப்படுகிறோம் என்று வேதனை தெரிவித்தனர்.

அத்துடன் திடக்கழிவு மேலாண்மையில் மாநிலங்களின் கொள்கையை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டும் அதற்கு பதில் அளிக்காத 10 மாநிலங்களுக்கு நீதிபதிகள் அபராதம் விதித்தனர்.

திடக்கழிவு மேலாண்மை கொள்கைகள் கேள்விக்குறியாகி இருப்பதால் டெல்லியிலும் மும்பையிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!