நம்பிக்கை வைத்து ஏமாற்றமடைந்த நிதியமைச்சர் பசில்!

விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சு பதவியில் இருந்து நீக்கினால் வாசுதேவ நாணயக்கார தானாகவே விலகுவார் என்ற நம்பிக்கையில்  அவரை நீக்கவில்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்களிடம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் விருப்பத்துடன் பதவியில் இருந்து நீக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களின் சந்திப்பின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது பசில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் மற்றும் ஆட்சியின் போது சில முடிவுகளை எடுக்க நேரிடும். அந்த அமைச்சர்களுடன் இருந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை ஏன் நீக்கவில்லை என கேட்கின்றீர்கள். மூன்றாவது தானாகவே போய்விடும் என நினைத்தோம். அவர்கள் சென்றுவிட்டார்கள் என்பதற்காக அரசாங்கத்தை நடத்தி செல்வது ஒரு கடினமான விடயம் அல்ல என அவர் கூறியுள்ளார்.

ஆனால் எங்களை விமர்சிப்பவர்கள், திட்டுபவர்கள் எங்கள் எதிரிகள் அல்ல. பொறுமையுடன் பணியாற்ற வேண்டும். அரசியல் சகிப்புத்தன்மை குறித்து பிரதமரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை அமைச்சு பதவியில் இருந்து விலகும் நோக்கம் தனக்கு இல்லையென நீர்வழங்கல் துறை அமைச்சர்  வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!