5 மாநில தேர்தல்: துவங்கியது ஓட்டு எண்ணிக்கை!

உ.பி., பஞ்சாப், உள்ளிட்ட 5 மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று (மார்ச் 10) காலை 8 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடக்கிறது.உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடந்தன.
    
நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உ.பி.,யில் சட்டசபை தேர்தல், கடந்த மாதம் 1௦ல் துவங்கி, இம்மாதம் 7ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடந்தது. நடந்தது. ஐந்து மாநிலங்களிலும் வெளியான ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில், உ.பி., உத்தரகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் ஆட்சியை பா.ஜ., தக்க வைக்கும் என்றும், பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியை பிடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

சில கருத்துக் கணிப்புகள், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் மாநிலங்களில் இழுபறி ஏற்படும் என தெரிவித்துள்ளன.இந்த ஐந்து மாநில தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள், இந்த ஆண்டு ஜூலையில் நடக்கும் ஜனாதிபதி தேர்தலிலும், 2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால், இது, மினி லோக்சபா தேர்தலாக கருதப்படுகிறது. இதனால், தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்த நாடும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!