இறக்குமதி பொருட்களின் விலை கடுமையாக அதிகரிக்கும் அபாயம்!

அமெரிக்க டொலரின் விற்பனை விலை 260 ரூபா வரை அதிகரித்துள்ளது. இரண்டு நாட்களுக்குள் டொலரொன்றின் விலை 58 ரூபாவால் அதிகரித்துள்ளது. இது 29% அதிகரிப்பாகும். டொலரின் விலை அதிகரிப்பால், இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்துப் பொருட்களினதும் விலைகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    
ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 51 ரூபாவாலும் ஒரு லிட்டர் டீசலின் விலை 35 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

12.5 கிலோ கிராம் எடையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 824 ரூபாவால் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 44 ரூபாவாலும் ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 101 ரூபாவாலும் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 45 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதற்கான சாத்தியமுள்ளது.

இறக்குமதி செய்யப்படுகின்ற ஒரு கிலோ கிராம் பால் மா பக்கெட் விலையை 300 ரூபாவால் அதிகரிப்பதற்கு பால் மா இறக்குமதியாளர்களின் சங்கம் ஏற்கனவே தயாராகியுள்ளது. இதற்கமைய, 400 கிராம் எடையுடைய பால் மா பக்கெட் விலை 120 ரூபாவால் அதிகரிக்கும் என அந்த சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!