டக்ளஸ் பெருந்தொகை மின்சாரக் கட்டண நிலுவையை செலுத்த தவறியதாக குற்றச்சாட்டு

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பெருந்தொகை மின்சாரக் கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தெற்கிலிருந்து வெளியாகும் சிங்கள நாளிதழ் ஒன்றில் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மீன்பிடித்துறை அமைச்சரான டகள்ஸ் தேவானந்தா சுமார் ஒரு கோடி ரூபா மின்சார கட்டண நிலுவைச் செலுத்த தவறியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வளவு பாரிய தொகை நிலுவைக் கட்டணத்தை செலுத்த தவறிய போதிலும் மின்சார இணைப்பு இன்னும் துண்டிக்கப்படவில்லை என இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் ஸ்டேன்லி வீதியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி அலுவலகத்தின் மின்சாரக் கட்டணமே இவ்வாறு நிலுவையில் உள்ளதாக இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பெருந்தொகை கட்டண நிலுவைச் செலுத்தவில்லை என்ற தகவலை அம்பலப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இது போன்றே அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மின்சாரக் கட்டண நிலுவையைச் செலுத்தாமை பற்றிய தகவல்களை அம்பலப்படுத்த உள்ளதாக ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!