தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் வழக்கில் அதிரடி திருப்பம்!

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் காவல்துறையினர் தாக்கியதில் சிறுநீர் கழிக்க முடியாத அளவுக்கு வலி இருப்பதாக ஜெயராஜ் கூறியதாக அரசு மருத்துவமனை செவிலி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
    
கடந்த 2020ஆம் ஆண்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், காவல்துறையினர் தாக்கியதில் சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்ததாக வழக்கு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கு, மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கோவில்பட்டி அரசு மருத்துவமனை செவிலி அருணாச்சல பெருமாள் சாட்சியம் அளித்தார். அப்போது, கோவில்பட்டி கிளை சிறையில் இருந்து அரசு மருத்துவமனைக்கு ஜெயராஜை அழைத்து வந்தபோது, அவரது உடல் முழுவதும் காயம் இருந்ததாகவும், சிறுநீர் கழிக்க முடியாத அளவுக்கு காயம் இருந்ததால் செயற்கை சிறுநீர் பை பொருத்தியதாகவும் செவிலி சாட்சியம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!