சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கைக்கு திடீர் விஜயம்

சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இலங்கைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக Reuters சர்வதேச செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இதற்கமைய சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்டஅதிகாரிகள் இன்று மற்றும் நாளைய தினங்களில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நாட்டின் பொருளாதாரம் தொடர்பிலான சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீட்டுஅறிக்கை குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில்சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கானசெயற்றிட்டத்தின் தலைவர் Masahiro Nozaki  Reuters சர்வதேசசெய்திச் சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்துஇலங்கை நிதி உதவியைக் கோராவிட்டாலும்,தேவைப்படும் பட்சத்தில் மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாட தமது உறுப்பினர்கள் தயராகஉள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!