நாட்டில் பாரிய எரிவாயு பற்றாக்குறை ஏற்படுவதற்கான அபாயம்……….

இலங்கை கடற்பரப்புக்குள் இரண்டு வாரங்களுக்கு முன்னதாக வருகைத்தந்த இரண்டு எரிவாயு கப்பல்களை விடுவிப்பதற்கு டொலர் கிடைக்காமையினால் நாட்டில் பாரிய எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் கணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரியொருவரை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, முன்னதாக விடுவிக்கப்பட்ட கப்பலின் எரிவாயு இருப்பு தற்போது முடிவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த கப்பல்களில் ஒரு கப்பல் விடுவிக்கப்படும் நிலையில், எரிவாயு விநியோகத்தினை முன்னெடுக்க முடியுமெனவும், அவ்வாறு இல்லாதவிடத்து நெருக்கடி நிலைமை ஏற்படுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டுள்ள இரண்டு கப்பல்களையும் விடுவிப்பது தொடர்பில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருவதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!