பயங்கரவாதத் திருத்த சட்டம் – நாடாளுமன்றத்தில் சமர்பிக்க அனுமதி

பயங்கரவாதத் தடை (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலம் இரண்டாவது வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைக் குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்டம் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று நடைபெற்றது.

பயங்கரவாதத் தடை (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலம் முதலாம் வாசிப்புக்காக வெளிவிவகார அமைச்சரினால் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கமைய திருத்தப்பட்ட சட்ட மூலத்திற்கு வெளிவிவகார அமைச்சின் ஆலோசனைக் குழுவினால் அனுமதி வழகியுள்ளது.

இதன்படி, பயங்கரவாதத் தடை (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்தச் சட்ட மூலம் இரண்டாவது வாசிப்புக்காக அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!