பஷில் பொறுப்புக்கூற வேண்டும்!

பொருளாதார பாதிப்பு தீவிரமடைவதற்கு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும். என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.
    
நாடு பாரிய பொருளாதார நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளை பெற்றுகொள்ள முடியாத நிலையில் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.
வரிசையில் நிற்கும் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைப்பதை அரச தலைவர்கள் கவனத்திற்கொள்ள வேண்டும்.

பொருளாதார பாதிப்பிற்கு நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ பொறுப்புக்கூற வேண்டும். நிதியமைச்சரின் தவறான நிதி முகாமைத்துவம் குறித்து ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் கவனம் கொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது.

பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்காக செயற்படுத்த வேண்டிய தீர்வு திட்டங்கள் தொடர்பிலான யோசனையை அரசாங்கத்திடம் பலமுறை முன்வைத்துள்ளோம். பங்காளி கட்சிகள் முன்வைத்த யோசனைகளை செயற்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை.
பங்காளி கட்சிகளின் யோசனைகள் செயற்படுத்தப்படுவதை நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவே தடுத்துள்ளார். தற்போதைய நிலையில் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்துள்ளதால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொருளாதார பாதிப்பிற்கு தீர்வு காணும் நோக்கம் நிதியமைச்சருக்கு கிடையாது.


பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்காக ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை காலம் தாழ்த்தப்பட்ட தீரமானமாகும். சர்வக்கட்சி மாநாட்டின் யோசனைகள் முழுமையாக செயற்படுத்தப்படுமா என்பது சந்தேகத்திற்குரியது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!