பி.டி. உஷாவின் சாதனையை முறியடித்த தமிழக வீராங்கனை!

தமிழகதின் தங்க மங்கை தடகள வீராங்கனை தான் தனலட்சுமி. இவர் தேசிய அளவில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். 2021 தேசிய ஃபெடரேஷன் கோப்பை போட்டியில் தனலட்சுமி 200 மீட்டர் தூரத்தை 23 புள்ளி 26 விநாடிகளில் கடந்து சாதனை புரிந்தார்.

23 ஆண்டு கால பி.டி. உஷாவின் சாதனையை தனலட்சுமி முறியடித்தார். உலகம் முழுவதிலும் இருந்து இவருக்கு வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்தன.
    
தற்போது திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய கிராண்ட் ஃப்ரி தடகள போட்டியீல் தனலட்சுமி 23 புள்ளி 21 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஸ்டார் வீராங்கணையான ஹிமா தாசுக்கு இதில் 2வது இடம் தான்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலப்பு ரிலே ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணியில் அவருக்கு போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தனலட்சுமியின் குடும்பம் மிகமிக ஏழ்மையானது. இவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்தவர்.
தாய் தான் கூலி வேலை செய்து இவரை வளர்த்து வந்தார். இவருடைய சகோதரி, தனலட்சுமி டோக்கியோ சென்றபோது உயிரிழந்தார்.
இந்த தகவலை அவரது குடும்பம் தனலட்சுமிக்கு தெரிவிக்கவில்லை.

தனலட்சுமி ஊர் திரும்பிய போது தான் தெரிவிக்கப்பட்டது.
விமான நிலையத்திலேயே தனலட்சுமி அழுது புரண்டு அழுதது காண்பவர் மனதை கரைய வைத்தது.

எத்தனை இழப்பை சந்தித்தாலும் தனலட்சுமியின் நம்பிக்கைகள் ஓயவில்லை.
விடாத பயிற்சியால் தற்போது மீண்டும் தங்கப் பதக்கத்தை தட்டிப் பறித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!