யாழிற்கு விஜயம் செய்யவுள்ள பிரதமர்: பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அபிவிருத்தி

பொருளாதார மத்திய நிலையம் ஒன்றைத் திறந்து வைப்பதற்காகப் பிரதமர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகிறது. 

தென்மராட்சி – மட்டுவில் வண்ணத்தி பாலத்திற்கு அருகில் உள்ள பொருளாதார மத்திய நிலையம் நாளைய தினம் திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ். மாவட்டச் செயலக ஏற்பாட்டில் இடம்பெறும் குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பிரதமர் மகிந்த ராஜபக்ச கலந்து கொண்டு மத்திய நிலையத்தையும், வர்த்தக தொகுதிகளையும் திறந்து வைக்கவுள்ளார்.

மாவட்ட விவசாய உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்கு வசதியாக 30ற்கும் மேற்பட்ட வர்த்தக நிலைய தொகுதிகள் மத்திய நிலையத்துடன் இணைத்து அமைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையிலும் இவ்வாறான அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!