கந்தரோடையில் பௌத்த கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டுகிறாார் பிரதமர் மகிந்த!

யாழ்ப்பாணம் கந்தரோடையில் பௌத்த கட்டுமானம் ஒன்றுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அடிக்கல் நாட்டவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    
இலங்கையில் பெருங்கற் காலத்தவர்கள் வாழ்ந்தாக நம்பப்படும் வரலாற்றுச் சான்றுகள் மீட்கப்பட்ட இடங்களில் கந்தரோடை பிரதானமானதாகும். செக்கு உட்பட்ட தமிழர்களின் மிகத் தொன்மையான அறிவியல் வளர்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலான ஆதாரங்கள் கந்தரோடையில் காணப்பட்டுள்ளன.

தமிழர்கள் பௌத்த மதத்தை கடந்தகாலங்களில் பின்பற்றினார்கள் என்பதற்கான சான்றுகளாக இன்னமும் சிறிய அளவிலான பௌத்த விகாரைகள் அங்கு காணப்படுகின்றன. இந்நிலையில் தொல்லியல் திணைக்களத்தினரால் குறித்த விகாரைத் தொகுதிகள் தொல்லியல் எச்சங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

பௌத்த விகாரைகள் காணப்படும் காணிக்கு தெற்குப் பக்கத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காணியை யாழ்ப்பாணத்தின் நாகவிகாரையை நிர்வகிக்கும் பௌத்த பிக்கு ஒருவர் அறுதியாக பணத்திற்குப் பெற்றிருக்கின்றார்.

அவர், பிரதேச சபை ஊடாக அந்தக் காணியில் கட்டுமானம் ஒன்றை அமைப்பதற்கான அனுமதியைக் கோரியிருக்கின்றார். பிரதேச சபையும் அதற்கான அனுமதியை வழங்கியிருக்கின்றது.

இந்நிலையில் இன்று அந்தக் காணியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அடிக்கல் நாட்டுவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!