வங்காளதேசத்தில் படகு கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு- பலர் மாயம்

தியதும் பலர் உயிர்பிழைப்பதற்காக படகில் இருந்து நதியில் குதித்து நீந்தி கரையேறினர்.

வங்காளதேசத்தில் இன்று 50 பயணிகளுடன் முன்ஷிகஞ்ச் நோக்கி சென்ற படகு மீது சரக்கு கப்பல் மோதியது. இதனால் நிலைகுலைந்த படகு, நதியில் மூழ்கியது. இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாலை நிலவரப்படி 4 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். மேலும் சிலரைக் காணவில்லை. அவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

படகு மீது கப்பல் மோதியதும் பலர் உயிர்பிழைப்பதற்காக படகில் இருந்து நதியில் குதித்துள்ளனர். அவர்களில்  சிலர் நீந்தி கரையேறினர். ஒருசிலர் மீட்பு படகில் ஏற்றப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.

காவல்துறை, கடற்படை மற்றும் கடலோரக் காவல்படையுடன் இணைந்து நீர்வழி போக்குவரத்து ஆணையம் மீட்புப் பணிகளியில் ஈடுபட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!