இலங்கையின் கடன் கோரிக்கையை ஆராய்கிறோம்-சீனா அறிவிப்பு!

இலங்கை கோரியுள்ள கடன் தொகை தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக சீனா அறிவித்துள்ளது.
அண்மையில் இந்தியாவிடம் ஒரு பில்லியன் டொலர்களை கடனாக பெற்ற பின்னர், இலங்கை, இந்த கோரிக்கையை சீனாவிடம் விடுத்திருந்தது.

இதனையடுத்து இலங்கையின் கோரிக்கையை ஆராய்ந்து வருவதாக இலங்கையில் உள்ள சீன துாதுவர் அறிவித்துள்ளார்.


ஒரு பில்லியன் டொலர்களை கடனாகவும் 1.5 பில்லியன் டொலர்களை கடன் பத்திரமாகவும் சீனாவிடம் இருந்து இலங்கை கோரியிருந்தது.

ஏற்கனவே இலங்கை, சீனாவிடம் நாணய பரிமாற்றத்துக்காக 1.5பில்லியன் டொலர்களை 2021ஆம் ஆண்டு பெற்றமைக்கு மேலதிகமாகவே இந்த கடன்கள் கோரப்பட்டுள்ளன. 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!