மனோ அடுத்து ஜீவனும் சர்வகட்சி மாநாட்டை புறக்கணிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், நாளை நடத்தப்படவிருக்கும் சர்வக் கட்சி மாநாட்டில் பங்கேற்க போவதில்லை என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்.
    
அதேவளை, பொருளாதார துறையில் மட்டுமல்லாது, பொருளாதார வீழ்ச்சியின் தொடர்ச்சியாக நம் நாடு அரசியல், சமூக, கலாச்சார துறைகள் உள்ளிட்ட சகல துறைகளிலும் அதல பாதாளத்தில் விழுந்துள்ள பின்னணியில், சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை கவனமாக பரிசீலித்து, இம்மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு செய்துள்ளதாக கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது, அரசாங்கத்தின் தோல்வியை எதிரணியின் தலைகளில் சுமத்துவதற்கான முயற்சியாகவும், அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை திருப்தி படுத்த அரசாங்கம் செய்யும் முயற்சியாகவும், இந்த அழைப்பை, பிரதான எதிரணியான ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சியாக நாம் கணிக்கிறோம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!