ஆட்சி மாற்றத்தின் பின்னரே தமிழர்களுக்கு தீர்வு – நாமல்

தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் அரசியல் தீர்வு விடயத்தை நல்லாட்சி அரசாங்கத்தினாலோ அல்லது வடக்கு தமிழ் அரசியல்வாதிகளினாலோ பெற்றுக் கொடுக்க முடியாது. ஆட்சி மாற்றத்தின் பின்னரே அனைத்துக்குமான தீர்வு கிடைக்கப்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

வடக்கில் மக்கள் பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவினை எதிர்கொண்டு வருகின்றனர். அங்கு ஆவா குழுவினரது செயற்பாடுகள் தொடர்ந்தும் அதிகரித்தாகவே உள்ளது. இதனால் மக்கள் தினமும் அச்சத்துடன் தனது அன்றாட வாழ்க்கையினை நகர்த்தி வருகின்றனர்.

இது தொடர்பாக வட மாகாண தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் எவ்வித அக்கறை செலுத்தாமல் செயற்படுவதே இந்த பிரச்சினைகளுக்கான பிரதான காரணாகும்.

வடக்கின் நிலைமைகள் இவ்வாறிருக்கையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வடக்கிற்கு அபிவிருத்தி தேவையில்லை. அரசியல் தீர்வே வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளமையானது அவரது பொறுப்பற்ற தன்மையினை வெளிப்படுத்துகிறது.

வட மாகாணமானது அபிவிருத்தி ரீதியில் முன்னேற்றமடைய வேண்டிய தளமாக காணப்படுகின்றது. இருப்பினும் தேசிய அரசாங்கத்தில் இவ் விடயங்கள் ஏதும் நிறைவேற்றப்பட மாட்டாது ஆட்சி மாற்றத்தின் பின்னரே நாடு பிளவுபடாத விதத்தில் அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!