ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடு ஆரம்பம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் சர்வக்கட்சி மாநாடு ஆரம்பமாகியுள்ளது.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யோசனைக்கு அமைவாக இந்த சர்வக்கட்சி மாநாடு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.

ஐக்கிய மக்கள் சந்தி, மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மாநாட்டை புறக்கணித்துள்ளன.

அத்துடன், அமைச்சு பதவிகளிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களான பிவித்துரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில மற்றும் முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்ச ஆகியோர் சர்வ கட்சி மாநாட்டினை புறக்கணித்துள்ளனர்.

இதேவேளை, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த சர்வக்கட்சி மாநாட்டில் பங்கேட்கவில்லை என்பதுடன், தமிழ் முற்போக்கு கூட்டணியும் சர்வகட்சி மாநாட்டினை புறக்கணித்துள்ளது.
இதேவேளை, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!