எதிர்கால தலைவர் தொடர்பில் உதய கம்மன்பில வெளியிட்டுள்ள தகவல்

அரசாங்கம் பெரும்பான்மை பலத்தை இழக்கும் என முன்னாள் அமைச்சரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டுக்கு ஏற்படும் அழிவுகளை தடுக்க செய்யப்படும் போராட்டங்களின் ஊடாக எதிர்கால தலைவர் உருவாகுவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கம் தனது பயணத்தை சரி செய்து கொள்ளத் தவறினால் நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தை இழக்க நேரிடும்.

அரசாங்கம் தனது பயணம் பிழையானது என புரிந்து கொண்டு தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ளத் தவறினால் இன்னும் சொற்ப காலத்தில் அரசாங்கம் பெரும்பான்மை பலத்தை இழக்க நேரிடும்.

அரசாங்கம் நாட்டுக்கு செய்யும் அழிவுகளை தடுக்கும் போராட்டத்திலிருந்து தலைவர் உருவாகுவார் என குறிப்பிட்டுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!