ஜெயலலிதா மரணம் தொடர்பில் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு வாக்குமூலம்!

ஜெயலலிதா மரணம் தொடர்பில் ஓ.பன்னீர்செல்வம் இரண்டாவது நாளாக ஆறுமுகசாமி ஆணையத்தில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஓபிஎஸ் அளித்த வாக்குமூலத்தில், ஜெயலலிதா குற்றவாளி என கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நேரத்தில் ஓபிஎஸ்தான் முதலமைச்சர், அவரது பெயரைத்தான் முன்மொழிய வேண்டும் என நத்தம் விஸ்வநாதனுக்கு தனது பாதுகாவலர் வீரப்பெருமாள் மூலம் ஜெயலலிதா கூறினார்.
    
ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ எந்தவிதமான சதித்திட்டமும் தீட்டவில்லை.

ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எனக்கு சந்தேகம் இல்லை, பொதுமக்கள் கருத்து வலுத்ததால் தான் நான் விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தேன். சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும், அபிமானமும் இன்றளவும் உண்டு என கூறியுள்ளார்.

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் தன்னிடம் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஜெயலலிதாவை அம்மா என்று குறிப்பிட்ட ஓபிஎஸ், சசிகலா குறித்த கேள்விகளுக்கும் சின்னம்மா என்றே அழைத்தார்.

இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!