தொடர்ந்து இருளில் மூழ்கும் இலங்கை

மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதுமான எரிபொருள் கிடைக்காமையினால் நாட்டில் இன்றும் ஆறு மணிநேரத்திற்கு அதிகளவான காலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, A   முதல் L  வரையான  வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான  காலப்பகுதிக்குள்  3 மணித்தியாலம் 20 நிமிடங்களும்   மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. 

அத்துடன், குறித்த வலயங்களில்  மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களும்   மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும்   P  முதல் W  வரையான  வலயங்களில் காலை 8.30 முதல்  மாலை 5.30 வரையான காலப்பகுதிக்குள் நான்கு மணித்தியாலமும் 30 நிமிடங்களும்  மின் விநியோகத்தடை  அமுல்படுத்தப்படவுள்ளது.

 அத்துடன், குறித்த வலயங்களில் மாலை 5.30   முதல்  இரவு  11 மணி  வரையான காலப்பகுதிக்குள் ஒரு மணித்தியாலம் 50 நிமிடங்களும் இவ்வாறு மின் விநியோகத்தடை  அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!