
மனித உரிமை அமைப்புகள் இந்த சம்பவத்தை கடுமையாக கண்டித்துள்ளன. இந்த குதிரை லாயம் அலெக்சான்ட்ரா என்ற பெண்ணுக்குச் சொந்தமானது.
இந்த சம்பவம் குறித்து அலெக்சான்ட்ரா கூறுகையில், போர் தொடங்கியதுமே எனது வீடு மற்றும் லாயத்தை ரஷ்யப் படையினர் ஆக்கிரமித்து விட்டனர். என்னை வீட்டை விட்டு போகுமாறும் மிரட்டினர்.
போகாவிட்டால் சுட்டுக் கொன்று விடுவதாகவும் மிரட்டி வந்தனர். இந்த நிலையில் லாயத்துக்கு தீவைத்து குதிரைகளைக் கொன்றுள்ளனர் என கூறியுள்ளனர்.
உக்ரைனுக்குள் புகுந்த ரஷ்ய படையினர் கடந்த 24ஆம் திகதி முதல் போர் தாக்குதலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!