கனடாவில் வீட்டில் தனியே இருந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

கனடாவில் வீடு தீப்பிடித்து எரிந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். ஒன்றாறியோவின் அலிஸ்டனில் தான் இந்த சம்பவம் கடந்த ஞாயிறு அன்று நடந்துள்ளது. அங்குள்ள வீடு தீப்பிடித்து எரிவதாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் வந்தது.
    
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தார்கள். பின்னர் எரிந்து கொண்டிருந்த வீட்டுக்குள் சிக்கியிருந்த பெண் வெளியே இழுத்து வரப்பட்டார்.

உடனடியாக ஏர் ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண்ணின் பெயர் நான்சி ஸ்டீவன்ஸ் (69) என்று தெரியவந்துள்ளது. இந்த தீவிபத்துக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில் விசாரணை நடந்து வருகிறது.
அதே சமயம் வீடு தீப்பிடித்ததற்கு சந்தேகத்துக்குரிய காரணங்கள் எதுவும் இல்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!