மருந்து பற்றாக்குறைக்கு தீர்வு…?

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையில் 14 வகையான மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர்ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற  கலந்துறையாடலின் போதே இந்த விடயம்தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு தேவையான14 வகையான  மருந்துகள் இறக்குமதி செய்யப்படும் திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் நாட்டில் எதிர்காலத்தில் மருந்து பற்றாக்குறை ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டொலர் பற்றாக்குறை காரணமாகவே மருந்துகளை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், 75 முதல் 80 வீதமான மருந்துகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதுடன், ஐந்து வீதமான மருந்துகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மேலும் ஐந்து முதல் 10 வீதமான மருந்துகள் பங்களாதேஷ் பாகிஸ்தான் மற்றும் ஐரோப்பாவில் இருந்து கொள்வனவு செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு தரம் குறைந்த மருந்துகள்கொள்வனவு செய்யப்படுவதாக எதிர்க்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்துள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!