மொட்டை தலையுடன் பிரபல நடிகை!

நடிகர்கள் மீசை மழித்துவிட்டு நடிப்பதே ஒரு காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. அடுத்து நடிகர்கள் மொட்டையடித்து நடித்தது செய்தி ஆனது. தற்போது நடிகைகள் துணிச்சலான கதாபாத்திரங்களை ஏற்கின்றனர். நிர்வாணமாகவும், தலைமுடியை மொட்டையடித்தும் நடிக்கின்றனர். சமீபத்தில் கன்னட படமொன்றிற்காக நடிகை சஞ்சனா கல்ராணியும், இந்தி படமொன்றிற்காக இலியானாவும் நிர்வாணமாக நடித்தனர்.

தமிழில் சசிகுமார் நடிக்க முத்தையா இயக்கும் கொடி வீரன் படத்துக்காக துணிச்சலாக நடிக்க முன்வந்தார் பூர்ணா. கதாபாத்திரத்துக்காக அவர் மொட்டையடித்து நடிக்கிறார். தற்போது மற்றொரு நடிகையும் மொட்டைதலையுடன் நடிக்க முன் வந்திருக்கிறார். கோவா, கோ போன்ற படங்களில் நடித்திருப்பவர் பியா. தமிழில் கைவசம் படங்கள் எதுவும் இல்லாத நிலையில் நல்ல கதாபாத்திரத்துக்காக காத்திருந்தார். இயக்குனர் பி.ஆர்.விஜயலட்சுமி தமிழ், மலையாளத்தில் இயக்கும் அபியும் அனுவும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் பியா.

Tags: