நாடாளுமன்றம் விரைவில் பெரும்பான்மையை இழக்கும் – உதய கம்மன்பில

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை அல்லது வரவு செலவு திட்டத்தை தோற்கடிப்பது உள்ளிட்ட விடயங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் உதய கம்பன்பில குறிப்பிட்டுள்ளார். 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், பொதுஜன பெரமுன கட்சியில்இருந்து 11 உறுப்பினர்கள் தமது தரப்பிற்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும், இதன் ஊடாக அரசாங்கத்திடம் பெரும்பான்மை இல்லாது போயுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். 

ஆகவே, எதிர்காலத்தில் சில முக்கிய தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அரசாங்கத்தில் சார்பில் 156 உறுப்பினர்கள் காணப்பட்ட நிலையில், தற்பொழுது மூன்று உறுப்பினர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறியுள்ளமையினால் 153 பேர் மாத்திரமே எஞ்சியுள்ளனர்.

அத்துடன் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான 11 கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 30 பேரும் பதவி விலகினால் 123 பேர் மாத்திரமே காணப்படுவார்கள்.
நாடாளுமன்றில் பெரும்பான்மை பலத்தினை பெற்றிருக்க 112 உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட வேண்டும்.

ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் 11 இற்கும் அதிகமானவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்காக இரகசியமான முறையில் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அவர்களும் வெளியேறினால் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் நாடாளுமன்றில் விரைவில் பெரும்பான்மையை இழக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.  

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!