இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணை எதிர்ப்பு கவசத்தை வாங்கும் ஜேர்மனி: ஏன் தெரியுமா?

இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணை எதிர்ப்பு கவசத்தை (Iron Dome) வாங்க ஜேர்மனி திட்டமிட்டுள்ளது. ரஷ்யா எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற சாத்தியங்களுக்கு மத்தியில், அதன் தாக்குதலுக்கு எதிராக நாட்டை பாதுகாக்க, இஸ்ரேலிய ஏவுகணை எதிர்ப்பு கவசம் அமைப்பை வாங்க ஜேர்மனி பரிசீலித்து வருகிறது என்று அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.
    
இஸ்ரேலின் அயர்ன் டோம் போன்ற பாதுகாப்பு அமைப்பை ஜேர்மனி வாங்குமா என்று கேட்டபோது, ​​”இது நிச்சயமாக நாங்கள் விவாதிக்கும் பிரச்சினைகளில் ஒன்றாகும்” என்று அவர் ARD-யிடம் கூறினார்.

பெர்லின் எந்த வகையான பாதுகாப்பு அமைப்பைக் கருத்தில் கொண்டுள்ளது என்பதை அவர் குறிப்பிடவில்லை.

ஜேர்மனியின் முழுப் பகுதிக்கும் ஏவுகணைப் பாதுகாப்புக் கவசம் அமைப்பது குறித்து பாதுகாப்புத் தலைவரான எபர்ஹார்ட் சோர்னை ஸ்கோல்ஸ் சந்தித்தபோது விவாதிக்கப்பட்டுள்ளது
அப்போது அவர்கள் இஸ்ரேலிய “Arrow 3” அமைப்பை கையகப்படுத்துவது பற்றி பேசினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்ற.

இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துவிட்டது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகம் உடனடி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!