கடந்த வாரத்தில் 16 தமிழக மீனவர்கள் கைது!

கடந்த வாரத்தில் 16 மீனவர்களையும், 3 படகுகளையும் இலங்கை அரசு சிறைபிடித்துள்ளது என தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு சேதமடைந்த படகுகளின் இழப்பீடு வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விசைப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கை 2014ஆம் ஆண்டு முதல் சிறைபிடித்த 184 படகுகளை முறையாக பராமரிக்காததால் அவை முழுமையாக சேதமடைந்து விட்டன. எனவே சேதமடைந்த படகு உரிமையாளர்களுக்கு 25 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வாரத்தில் 16 மீனவர்களையும், 3 படகுகளையும் இலங்கை அரசு சிறைபிடித்துள்ளது என அவர் தெரிவித்துள்ளனர்.

குறித்த மீனவர்களை மீட்பதுடன், படகுகள் சேதமடைவதற்கு முன்பாக அவற்றை மத்திய அரசு மூலம் உடனடியாக மீட்க வேண்டும் என தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!