மியான்மரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் 370 பேர் சுட்டுக்கொலை!

மியான்மரில் உள்நாட்டு கலவரம் உச்சமடைந்துள்ள நிலையில் 370 ரோஹிஞ்சா முஸ்லிம் போராளிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. மியான்மரில் சிறுபான்மை இன மக்களான ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கும் இராணுவத்தினருக்கு இடையிலான மோதல் கடந்த 25ஆம் திகதி முதல் உச்சம் தொட்டுள்ளது.

இந்த மோதல் காரணமாக ரோஹிஞ்சா முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டுள்ளதுடன், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் புலம்பெயர்ந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்நிலையில், கடந்த வாரம் இடம்பெற்ற மோதலில் 370 ரோஹிஞ்சா முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.மேலும், இந்த மோதலின் போது 15 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு இராணுவத்தளபதி Aung Hlaing தெரிவித்துள்ளார்.இதேவேளை, மியானமரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் அடக்கு முறைகளுக்கு பல்வேறு தரப்பினர்களும் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Tags: