இந்த அரசை கவிழ்க்க முடியாது! ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி திட்டவட்டம்

சூழ்ச்சிக்காரர்கள் அரசிலிருந்து வெளியேறிவிட்டனர். எனவே, அரசின் இருப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. இந்த அரசை எவராலும் கவிழ்க்கவே முடியாது என ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் மற்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர்கள் மேலும் தெரிவிக்கையில், அரசின் நாடாளுமன்ற அணி பலமாகவே உள்ளது. எமது பக்கம் உள்ளவர்கள் மீது எமக்குப் பூரண நம்பிக்கை உள்ளது. அரசின் திட்டங்களை அவர்களும் நம்புகின்றனர்.

எனவே, பலமான அரசாக இந்தப் பொருளாதாரச் சவாலை வெற்றிகொள்வோம். அடுத்த தேர்தலில் வெற்றிநடையும் போடுவோம். சூழ்ச்சிக்காரர்கள் வெளியேறிவிட்டனர். அங்கும், இங்கும் சென்று ஒப்பாரி வைக்கின்றனர்.

முடிந்தால் 113 என்ற சாதாரணப் பெரும்பான்மையை இல்லாது செய்யுமாறு சவால் விடுக்கின்றோம். அது அவர்களால் முடியாது.

நாம் கெஞ்சப்போவதும் இல்லை. பலம் பொருந்திய தலைவரான பசில் ராஜபக்சவை வீழ்த்துவதற்கே முற்படுகின்றனர். அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ளனர். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!