தல படத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமார்!

பாலிவுட்டில் பிரபல நடிகரான அக்ஷய் குமார் ஷங்கர் இயக்கத்தில் `2.0′ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அஜித் படத்தில் நடிக்க அக்ஷய் குமார் ஒப்பந்தமாகியிருக்கிறார்.சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான படம் ‘வீரம்’.

தமன்னா, விதார்த், பாலா, சந்தானம், நாசர், தம்பி ராமையா, அப்புக்குட்டி, ரமேஷ் கண்ணா, இளவரசு, அபிநயா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு தமிழில் கிடைத்த அமோக வரவேற்பினால் தெலுங்கில் `கட்டமராயுடு’ என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கு ரீமேக்கில் பவண் கல்யாண் – சுருதி ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தெலுங்கிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்ததாக இந்தியிலும் இந்தப்படம் ரீமேக் செய்யப்படுகிறது. பாலிவுட் இயக்குநர் பர்காத் இயக்கவிருக்கும் இந்த படத்திற்கு `லேண்ட் ஆஃப் லுங்கி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அஜித் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலம் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். சாஜித் நாடியாவாலா இந்த படத்தை தயாரிக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் `2.0′ படத்தில் அக்‌ஷய் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: