நடுவானில் செல்பி எடுத்த பிரேசில் விமானி!

பிரேசில் நாட்டை சேர்ந்த விமானி ஒருவர் பறக்கும் விமானத்தில் ஜன்னலுக்கு வெளியே வந்து செல்பி புகைப்படம் எடுத்துள்ளதாக வெளியான தகவல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.ஐக்கிய அமீரகத்தில் வசித்து வரும் பயணி சமீபத்தில் துபாயில் உள்ள Palm Jumeirah என்ற பகுதிக்கு மேலே விமானத்தில் பறந்துள்ளார்.

அப்போது, காக்பிட் எனப்படும் விமானிகளின் அறையில் உள்ள ஜன்னலுக்கு வெளியே வந்து செல்பி புகைப்படம் எடுத்துள்ளார்.பாதி உடல் வெளியே உள்ளபோது புகைப்படத்தின் பின்னணியில் துபாய் இருப்பது போன்று புகைப்படம் எடுத்துள்ளார்.பின்னர், சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தை வெளியிட்டதும் அது பரபரப்பான விவாதத்திற்கு உள்ளானது.‘இது நிச்சயமாக உண்மையான புகைப்படமாக இருக்காது. Green Screen என்ற தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தி போட்டோஷாப் செய்துள்ளார்’ என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

‘ வானத்தில் பறந்துக்கொண்டு இருக்கும்போது விமானியின் தலைமுடி கலையாமல் நேராக இருப்பதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது’ என சிலர் கூறியுள்ளனர்.மணிக்கு 100 கி.மீ வேகத்தில் பறக்கும்போது எதிர் திசையை நோக்கி கையை வெளியே நீட்டி புகைப்படம் எடுக்க முடியாது.ஏனெனில், இவ்வளவு வேகத்தில் பறக்கும்போது அவரது கை ஆடாமலும், புகைப்படம் மிகவும் தெளிவாகவும் எடுக்க வாய்ப்பில்லை என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags: ,